'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் தேதி மாற்றமா? படக்குழுவினர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,February 24 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை குவித்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதனை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரு சிலர் சமூகவலை தளங்களில் ’பொன்னின் செல்வன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாகவும் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். ஆனால் இந்த கருத்தை தற்போது பட குழுவினர் மறுத்துள்ளனர். ஏப்ரல் 28ஆம் தேதி ’பொன்னியின் செல்வன் 2’ படம் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட புரமோஷன் பணிகளையும் விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தை பார்த்தால் கூட இந்த படமும் ரூ.500 கோடியை வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராயின் இன்னொரு கேரக்டர் அறிமுகம் ஆகும் என்பதால் இந்த படத்திற்கு முதல் பாகத்தை விட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஷ்மீரில் செம அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்.. வைரல் புகைப்படங்கள்..!

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜெண்ட்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

என்ன சொல்ல வர்ற.. ஒண்ணுமே புரியலையே.. பிரேம்ஜியின் 'சத்திய சோதனை' டிரைலர்..!

நகைச்சுவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'சத்திய சோதனை' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில்

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? என்ன கேரக்டர் தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'காதல் கொண்டேன்' 'புதுப்பேட்டை' 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் செல்வராகவன்

சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ்ப்பெண்ணா? எப்போது திருமணம்?

நடிகர் சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ் பெண் என்றும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் டைட்டில் இதுவா? 'லியோ'வுக்கு போட்டியா?

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்