அஜித்துக்கு அறிவுரை கூறிய மன்சூர் அலிகான்

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படத்தின் வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் செய்தவர்களை கோலிவுட் திரையுலகின் பிரபலங்களும் அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் எந்த ஒரு விஷயத்தையும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான், அஜித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்

மன்சூர் அலிகானின் அறிவுரையின்படி அஜித் அடுத்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஓவியாவை தூக்கி உச்சத்தில் வைத்த ரசிகர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசில நாட்களிலேயே ஓவியா பக்கம் திரும்பி விட்டது...

சினேகனை கடுப்பேற்றிய டாஸ்க்: அட்வைஸ் செய்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் சினேகன் இதுவரை புறம் கூறுதல், கட்டிப்பிடி வைத்தியம், தேவையில்லாத விஷயத்தில் தலையிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் முதல் ஆளாக முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார்.

'மெர்சல்' படக்குழுவினர்களின் அடுத்த மைல்கல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பலவித சாதனைகளை படைத்து வருகிறது. உதாரணமாக தென்னிந்தியாவிலேயே டுவிட்டரில் இமோஜி பெற்ற முதல் திரைப்படம் 'மெர்சல்' தான்...

திலீப் ஜாமீன் மனு: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்...

புரட்சி தளபதி விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர், என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம், புரட்சி தளபதி விஷால் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.