close
Choose your channels

அஜித்துக்கு அறிவுரை கூறிய மன்சூர் அலிகான்

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படத்தின் வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் செய்தவர்களை கோலிவுட் திரையுலகின் பிரபலங்களும் அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் எந்த ஒரு விஷயத்தையும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான், அஜித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்

மன்சூர் அலிகானின் அறிவுரையின்படி அஜித் அடுத்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.