close
Choose your channels

'வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக்கில் மாஸ் நடிகர்.. சமுத்திரக்கனி கேரக்டரில் இவரா?

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரகனி இயக்கி நடித்த ’வினோதயா சித்தம்’ என்ற திரைப்படம் கடந்த 2021ஆம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில், உதவி ஜெனரல் மேனேஜராக இருக்கும் தம்பி ராமையா திடீரென ஒரு விபத்தில் இறந்துவிட, அவர் மேலோகம் செல்லும்போது கடவுள் சமுத்திரக்கனி அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். தம்பி ராமையா தனது குடும்பச் சுமைகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் 90 நாட்களுக்குள் திரும்பி வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். மேலும் அதுவரை தம்பி ராமையா கூடவே தானும் இருப்பேன் என்று சொல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் வித்தியாசமான கதை.

இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமுத்திரக்கனி வேடத்தில் தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என்பது தான் ஆச்சரியமான தகவல்.

அதே போல் தம்பி ராமையா கேரக்டரில் பவன் கல்யாணின் நெருங்கிய உறவினரான சாய்தரம் தேஜ் என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment