தளபதி 67' படத்தில் இணையும் 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' பிரபலம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்திலும் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் லோகேஷ் கனகராஜூக்கு திரைக்கதை எழுதுவதில் உறுதுணையாக இருந்தவர் ’ஆடை’ பட இயக்குனர் ரத்னகுமார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்கப்போகும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதையிலும் ரத்னகுமார் பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - ரத்னகுமார் கூட்டணியில் உருவான ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’தளபதி 67’ திரைப்படமும் அதேபோல் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் அவர் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

More News

கவலைப்படாதீங்க, மனசை தேற்றி கொள்ளுங்கள்: மீனாவுக்கு ஆறுதல் கூறிய தமிழக அமைச்சர்!

நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருக்கு நேரில் தமிழக அமைச்சர் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

கைக்குழந்தையுடன் மழையில் நனைந்து செமஆட்டம் ஆட்டம் போடும் நடிகை: வீடியோ வைரல்

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் கைக்குழந்தையுடன் மழையில் நனைந்து ஆட்டம் போடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ

22 வருடங்களுக்கு பின் மீண்டும் அதே சூப்பர்ஹிட் பாடல்: குஷ்பு வெளியிட்ட வீடியோ!

22 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் பாடல் மீண்டும் தனது படத்தில் இடம்பெற்றுள்ளதாக  நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

'சூப்பர் சிங்கர்' முத்துச்சிப்பிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்: இன்று பாடல் ரிலீஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முத்துச்சிப்பிக்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட வாய்ப்பு கொடுத்து உள்ளதாகவும்

20 வருஷத்துல நீங்க தான் பெஸ்ட்: சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் மாதவனுடன் சிம்ரன் நடித்த 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் மாதவனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான