close
Choose your channels

தளபதி 67' படத்தில் இணையும் 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' பிரபலம்!

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்திலும் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் லோகேஷ் கனகராஜூக்கு திரைக்கதை எழுதுவதில் உறுதுணையாக இருந்தவர் ’ஆடை’ பட இயக்குனர் ரத்னகுமார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்கப்போகும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதையிலும் ரத்னகுமார் பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - ரத்னகுமார் கூட்டணியில் உருவான ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’தளபதி 67’ திரைப்படமும் அதேபோல் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் அவர் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment