பெப்சிக்கு 'மாஸ்டர்' இயக்குனர் செய்த உதவி!

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

திரைப்படத்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் குவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய், சூர்யா 10 லட்சம் ரூபாய், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய், விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாய், என ஒருபக்கம் நிதி உதவி குவிந்து வரும் நிலையில் கலைப்புலி எஸ் தாணு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், உள்ளிட்ட பலர் அரிசி மூட்டைகளை கொடுத்து பெப்சி தொழிலாளர்களின் பசியை போக்க உதவி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பங்காக ரூபாய் 50 ஆயிரத்தை பெப்சியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பெப்சி தொழிலாளர்களின் பசியை தீர்க்க லோகேஷ் கனகராஜ் செய்த உதவிக்கு பெப்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

More News

கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம்: இந்திய தனியார் நிறுவனம் அசத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் கொரோனா!!! 

உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண்குழந்தைக்குக் கொரோனா எனப் பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது.

வருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்!!! மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா எதிரொலியால் வருமானவரி, ஜி.எஸ்.டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சில சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா

தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரியின் முக்கிய அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக தனி அதிகாரியின் பொறுப்பில் உள்ள நிலையில் சற்றுமுன் தனி அதிகாரி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'பேட்ட' நடிகரின் திருமணத்தில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.