தனுஷின் 'D43' படப்பிடிப்பில் இணைந்த 'மாஸ்டர்' நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் 'D43' என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ‘மாஸ்டர்’ நடிகர் இணைந்துள்ள தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கி வரும் 'D43' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரும் மாளவிகா மோகன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் மகேந்திரன் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் பாடல்களை விவேக் மற்றும் கார்த்திக் நரேன் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக முதன்முதலாக மாளவிகா மோகன் நடிக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

More News

'வலிமை'யால் ஏமாந்த நடிகர் மனோபாலா: ரசிகர்கள் அலர்ட் செய்ததால் பரபரப்பு!

'வலிமை' படத்தின் அடுத்த லுக் வருவதாக ஃபேக் ஐடி செய்தி வெளி வந்ததை பார்த்து ஏமாந்த நடிகர் மனோபாலாவை ரசிகர்கள் அலர்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அப்பீல் செய்யப்போகிறாரா விஜய்? சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை என தகவல்!

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள் அம்மா-அப்பா: புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளில் மூலம் வேற லெவலில் பிரபலமானவர் புகழ் என்பது தெரிந்ததே.

என் முன்னால் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன்: கிளாமர் பார்வையில் மாளவிகா மோகனன்

கிளாமர் உடை மற்றும் பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன், என் முன் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன் என்று பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.