'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா?

  • IndiaGlitz, [Friday,May 28 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனும் அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை அஜித் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் இசையமைப்பாளர் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிப்ரான் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

மேலும் ஆகாஷ் முரளி ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த ஒரு விரிவான தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மங்காத்தா' தயாரிப்பாளருக்கு வாழ்த்து கூறிய ஆர்யா: காரணம் இதுதான்!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்களின் மகனும் 'மங்காத்தா' உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கு நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இளையராஜாவின் பாடல்களை பாடி இறுதியஞ்சலி செலுத்திய நண்பர்கள்: நெகிழ வைக்கும் வீடியோ

இசைஞானி இளையராஜாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகமெங்கும் உண்டு என்பது அறிந்ததே. அந்தவகையில் மலேசியாவை சேர்ந்த இசைஞானியின் ரசிகர் ஒருவரின் மறைவிற்கு

அனைத்து மத பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்.....! பாடலாசிரியர் தாமரை செருப்படி பதிவு...!

கடந்த சில நாட்காளாக பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆசிரியர்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீங்க உண்மையிலேயே ராணி தான்: 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பாப்பாவின் க்யூட் புகைப்படம்!

சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்' என்பதும் இந்த வெற்றி படத்தில் சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா என்பதும் தெரிந்தது

இவ்ளோ ஆக்ரோஷம் வேண்டாம்… கோலிக்கு அறிவுரை சொன்ன லெஜெண்ட் வீரர்!

டெஸ்ட் தொடர் போட்டிக்காக இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.