'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 13 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

‘அழகிய கண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் நாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதன் இசையில் வைரமுத்து பாடல்களில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் திண்டுக்கல் லியோனி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சென்னை சேப்பாக்கத்தில் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்! வைரல் புகைப்படம்!

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

மீண்டும் ஆர்யாவுடன் இணையும் பிரபல இயக்குனர்!

நடிகர் ஆர்யா நடித்த திரைப்படம் ஒன்றை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் மீண்டும் ஆர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

37 வருடங்களுக்கு முன் லட்சுமி ராமகிருஷ்ணன் எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனர் அவதாரத்தில் ஜொலித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், 37 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில்

புதிய அணி தேர்வு குறித்து இந்திய கேப்டன் கூறிய திடுக்கிடும் காரணம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? இதுவரை வெளிவராத புகைப்படம்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனின் 16 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்