என் சகோதரர் தல தோனி கையில் பாதுகாப்பாக இருக்கிறார்.. பதிரானா சகோதரி நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

என் சகோதரர் தல தோனியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் என்று மதிஷா பதிரானா சகோதரி நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர் மதிஷா பதிரானா. இவர் முன்னாள் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா பாணியில் பந்து வீசுவதால் இவரது பந்துவீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த இவர் முதல் போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்திலேயே குஜராத் அணியின் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 10 ஓவர்களுக்கும் மேல் பந்து வீச வரும் பதிரானா, கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மதிஷா பதிரானா குடும்பத்தினர் தல தோனியை சென்னையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை மதிஷா பதிரனாவின் சகோதரி விசுவா பதிரானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ’எனது சகோதரர் தற்போது தல தோனியின் கையில் பாதுகாப்பாக இருக்கிறார். நீங்கள் மதிஷாவை பற்றி எந்த விதமான கவலையும் பட வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல தோனி அவர்களை சந்தித்தது மறக்க முடியாத நினைவு’ என்றும் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படம் ஓடிடியில் நேரடி ரிலீஸ்.. தேதியை அறிவித்த ஜியோ சினிமா..!

கடந்த சில மாதங்களாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கட்டத்தில் நேரடியாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை

234 தொகுதிகளிலும் மதிய உணவு.. பசிப்பிணியை போக்கிடும் தளபதி விஜய்..!

ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அன்றைய தினத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு மதிய உணவு அளிக்க ரசிகர்களுக்கு

60 வயதில் திருமணம் செய்து கொண்ட ரஜினி, விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

ரஜினி, விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணசுத்திர வேடங்களில் நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

நடிகை அஞ்சலியின் 50வது படத்தின் அறிவிப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் படம்.. சமந்தா தான் நாயகி..!

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.