close
Choose your channels

இவர்தான் டைட்டில் வின்னர்.. அடித்து சொல்லும் மாயா-பூர்ணிமா.. அதிர்ச்சியுடன் கேட்கும் விசித்ரா..!

Monday, January 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். ஏற்கனவே விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இன்னும் 4 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் மற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதை கிட்டத்தட்ட பார்வையாளர்கள் முடிவு செய்துவிட்டனர் என்று சொல்லலாம். அர்ச்சனாவுக்கு தான் டைட்டில் வின்னர் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு மாயா, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர்களில் இருவர் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் டைட்டில் வின்னர் குறித்து மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று மாயா கூற அதை பூர்ணிமாவும் ஆமோதிக்கிறார்.

எதை வைத்து சொல்கிறீர்கள் என்று விசித்ரா கேட்க, அதற்கு ’என்ன காரணம் என்று யாருக்குமே தெரியாது, ஏன் அர்ச்சனாவுக்கே தெரியாது, ஆனால் அவர் தான் டைட்டில் வின்னர்’ என்று பூர்ணிமா கூறுகிறார்

மேலும் வாக்குகள் வைத்துதானே இந்த டைட்டில் வின்னர் பட்டம், அர்ச்சனாவுக்குதான் அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பூர்ணிமா சொல்கிறார். அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என பூர்ணிமா, மாயா ஆகிய இருவரும் வருத்தத்துடன் கூறுவதை மிகுந்த சோகத்தோடு விசித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.