மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் பான் இந்திய திரைப்படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட் இணையும் மட்கா என பெயரிடப்பட்டுள்ள ,பான் இந்தியா திரைப்படம் பூஜை விழாவுடன், பிரமாண்டமாக துவங்கியது

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், மிகப்பெரிய பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த #VT14 பிரமாண்ட திரைப்படம் இன்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

இவ்விழாவில் சுரேஷ் பாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை இயக்குநரிடம் ஒப்படைத்து பணிகளை தொடங்கினார்கள். மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, இயக்குனர் மாருதி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து, முதல் ஷாட்டின் படப்பிடிப்பை துவக்கினார். இந்த முதல் ஷாட்டை தில் ராஜு அவர்கள் இயக்கினார். . டைட்டில் போஸ்டரை ஹரிஷ் ஷங்கர் வெளியிட்டார்.

#VT14 க்கு மட்கா என சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் டைட்டில் போஸ்டர் தனித்துவமாகவும் வெகு சுவாரசியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்கா என்பது சூதாட்டத்தின் ஒரு வடிவம். 1958-1982 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைசாக் நகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. 24 வருடங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், 1958ல் இருந்து 82 ஆம் ஆண்டு காலகட்டம் வரை வருண் தேஜை நான்கு விதமான கெட்-அப்களில் இப்படத்தில் தோன்றவுள்ளார். வருண் தேஜ் திரை வாழ்வின் பிரமாண்ட படமாக உருவாகும் இப்படத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கவுள்ளார்.

60களில் வைசாக் நகரை சித்தரிக்கும் பிரமாண்டமான விண்டேஜ் செட் படத்திற்காக அமைக்கப்படவுள்ளது. 60களின் சூழலையும் உணர்வையும் திரையில் கொண்டு வர படக்குழு கூடுதல் அக்கறையோடு உழைப்பைக் கொட்டி வருகிறது. ஆஷிஷ் தேஜா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

படத்திற்காக அற்புதமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ப்ரியாசேத் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் எடிட்டராக பணியாற்றுகிறார்.

மட்கா உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்களை கொண்டுள்ளது, எனவே இது பான் இந்தியா அளவில் பிரமாண்ட படைப்பாக உருவாக்கப்படவுள்ளது. . இது உண்மையில் வருண் தேஜுன் முதல் பான் இந்தியா திரைப்படமாகும், மேலும் இது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் நடிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

More News

பணத்தை திருடிய நபர் தெரிந்தும் மனிதாபிமானமாக நடந்து கொண்ட கமல்-ரஜினி பட நடிகை..!

தன்னுடைய வீட்டில் பணம் திருடு போனதை அடுத்து அந்த திருட்டை செய்வது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரும் மனிதாபிமானமாக காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கமல், ரஜினி

நயன்தாரா இஷ்டமில்லை என்று சொல்லும்போது அவரை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்

நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்கு வர இஷ்டமில்லை என்று கூறினால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நடிகர் விஷால் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். 

'ஜெயிலர்' படத்தில் தமன்னா கேரக்டர் இதுவா? அதனால் தான் 'காவாலா' பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த உலகம் உழைக்கிறவன மட்டும் தான் நம்பும்: விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு பட டீசர்..!

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த 'லக்கி மேன்' என்ற படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

31 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த இளையராஜா-பாரதிராஜா.. என்ன படம் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில் கடந்த 31 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு