வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்திற்கும், படத்தின் வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள், படத்திற்கு குவிந்த ஆதரவால் காணாமல் போனார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் மெர்சலாகிய இந்த படம் வரும் வெள்ளி முதல் அதாவது அக்டோபர் 27 முதல் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாகாணங்களிலும், உலகமெங்கும் உள்ள தெலுங்கு ரசிகர்களுக்காகவும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'அதிரிந்தி' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு தமிழை போலவே சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்ட தயாராகும் 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பை வரவேற்க தெலுங்கு ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர் என்பது குவிந்து வரும் டுவிட்டரில் இருந்து தெரியவருகிறது.

More News

2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியதை இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது.

மேயாத மானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சுனாமியில் தப்பித்த ஒரே படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மேயாத மான்'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை

கமல்ஹாசன் மீதான நிலவேம்பு சர்ச்சை: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் படுவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

'மெர்சலுக்க்கு தமிழக அரசும் ஆதரவு! தனிமைப்படுத்தப்பட்டதா பாஜக?

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்தால் இந்த படம் தேசிய அளவிலும் பரபரப்புடன் விவாதம் செய்யப்பட்டது.

கவுண்டமணி காமெடியில் குத்து பாட்டு பாடிய டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாகேந்திரபிரசாத நெகட்டிவ் ஹீரோவாக நடித்து வரும் 'கூத்தன்' என்ற படத்திற்காக சமீபத்தில் ஒரு குத்து பாடலை அவர் பாடியுள்ளார்.