பெராரி காரா, மெட்ரோ ரயிலா, எது சிறந்தது? தமிழ் நடிகரின் பதிவு

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்வதற்கு மெட்ரோ ரயில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு பொதுமக்களிடையே குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழ் நடிகர் ரகுமான் அவர்கள் தான் எப்போதும் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு மெட்ரோ ரயிலை தான் பயன்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’ஒவ்வொரு முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு செல்வதற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்கும்  மெட்ரோ ரயிலையே நான் பயன்படுத்துகிறேன் 

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பெராரி காரை விட வெகு வேகமாக வீட்டிற்கு வந்துவிடலாம். அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சுத்தமாகவும் வசதியாகவும் மாசு இல்லாமலும் மிக வேகமாகவும் செல்லும் வகையிலும் உள்ளது என்றும், மெட்ரோ ரயில் தான் சென்னையில் உள்ளூர் பயணத்துக்கு மிகவும் சிறந்தது என்று அவர் கூறியுள்ளார் 

மேலும் அவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரகுமானின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

More News

பட்டப்பகலில் நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்: வீடியோ எடுத்த பொதுமக்கள்!

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் தனது காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொண்டிருந்த நிலையில் சுற்றி நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தது

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர்? கமல்ஹாசன் பதில்!

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் குதிக்க உள்ளனர்

திடீர் திருப்பம்: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக அமைதியாக எதுவுமே செய்யாமல் விளையாடி வருபவர்கள் காப்பாற்றப்பட்டும், ஆர்ப்பாட்டமாக, ஆத்திரமாக விளையாடி வருபவர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.

ரியோ அந்த கேள்வியை பாலாகிட்டயே கேட்டிருக்கலாமே: நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் லக்சரி பட்ஜெட் டாஸ்க் உள்பட வாரத்திற்கு 3 அல்லது 4 டாஸ்க்குகள் நடைபெற்றாலும் ஒரு டாஸ்க் கூட சண்டை சச்சரவு இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடியதாக சரித்திரமே இல்லை

மரத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்ட முயன்ற பிரபல நடிகருக்கு நெருக்கமானவர் பரிதாப பலி!

கிறிஸ்மஸ் பண்டிகை இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து அந்த பண்டிகைக்காக மரத்திலேறி கிறிஸ்மஸ் ஸ்டார் கட்ட முயன்ற பிரபல நடிகரின்