அஜித்துடன் நடித்ததை 27 வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்த 'மெட்டி ஒலி' நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

தல அஜித்துடன் நடித்ததை 27 ஆண்டுகள் கழித்து தனது இன்ஸ்டாகிராமில் ’மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகை நினைவுகூர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காயத்ரி அதன் பின்னர் ஒரு திரைப்படங்களில் நடித்தாலும் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் காயத்ரி சமீபத்தில் ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜீத்துடன் அவர் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை காயத்ரி தனது இன்னொரு பதிவில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும், அவருடைய க்யூட் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4-ஆவது அலை வரக்கூடும்....! எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்...!

கொரோனாவின் நான்காம் அலை வரக்கூடும் என, போலந்தின் சுகாதாரத்துறை அ

பழம்பெரும் நடிகரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகர் ஒருவரின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நாளை முதல் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2': மோகன்லால் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த திரைப்படம் தமிழ்

பிக்பாஸ் காஜல் பசுபதிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை காஜல் பசுபதி தனக்கு திருமணம் என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதே சிரிப்பு, கொஞ்சம் கூட மாறவில்லை: நடிகை லைலா செல்பிக்கு ரசிகர்கள் பாராட்டு 

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000ல் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவர் லைலா. குறிப்பாக அஜித் நடித்த 'தீனா', விக்ரம் நடித்த 'தில்', சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல வெற்றிப் படங்களில்