மெர்சல் காளையுடன் இணையும் துள்ளி வரும் மான்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் அனைத்து தடைகளையும் தகர்த்து வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவருவது உறுதி என்றும், தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும் தயாரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் தீபாவளி அன்று 'மெர்சல்' ரிலீஸ் உறுதி என்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட மற்ற படங்களின் ரிலீசும் உறுதி என்று எடுத்து கொள்ளலாம்

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேயாத மான்' திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிலீஸ் தேதியுடன் வெளிவந்துள்ள இந்த படத்தின் புதிய போஸ்டரில் 'மெர்சலான காளை வருதுங்க! கூடவே...துள்ளி மானும் வருதுங்க! என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் இணையும் ஓவியா-சினேகன்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலருக்கு மிகப்பெரிய புகழும், ஒருசிலருக்கு கடுமையான விமர்சனங்களும் கிடைத்தது.

புதுப்படங்கள் ரிலீஸ் தடை எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'தரமணி'

கேளிக்கை வரி பிரச்சனை காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்த நிலையில் தற்போது ஏற்கனவே ரிலீஸ் ஆன விவேகம், ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மகாதேவி

தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வரின் கார் திருட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புளூவேகன் கார் தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென மர்ம நபர்களால் திருடுபோயுள்ளது.

மெர்சலில் 'மெர்சல்' காட்டிய ஜூனியர் வடிவேலு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரிந்ததே.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களிடம் ஜி.வி.பிரகாஷ் வைத்த கோரிக்கை

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் அனிதா பிரச்சனை வரை பல சமூக பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே.