வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டியவருக்கு அடித்தது அடுத்த லாட்டரி!!!
ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு ஏழை நாடு தான்சானியா. இந்நாட்டில் அதிகளவு கனிம வளங்கள் கிடைக்கின்றன. தங்கம், வெள்ளி, டைமண்ட், மரகத கற்கள் சாதாரணமாக இந்நாட்டில் கிடைப்பது வழக்கம். இதனால் அப்பகுதியில் அதிகளவு சுரங்கங்கள் இயங்குகின்றன. இருந்தாலும் கனிம வளங்களை கடத்துவது தொடர்ந்து நடப்பதால் மக்களும் தங்களது வீடுகளில் சுரங்கத்தைத் தோண்டிக்கொள்ள கடந்த 2018 முதல் அந்நாட்டு அரசு அனுமதியளித்து இருக்கிறது.
அப்படி தோண்டுவதால் கிடைக்கும் கொருட்களை அரசாங்கமே பெற்றுக்கொண்டு அதற்குரிய விலையையும் மக்களுக்கு கொடுத்து விடும். அந்த வகையில் சன்னியூ லைஸார் (52) என்பவர் தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் பல ஆண்டுகளாகவே சுரங்கம் தோண்டும் பணியில் இடுபட்டு இருக்கிறார். கடந்த ஜுன் 24 ஆம் தேதி இரவு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது அவருக்கு 2 மரகதக் கற்கள் கிடைத்தது. பூரிப்பில் திளைத்த லைஸார் மரகத கற்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதன்மூலம் இந்திய மதிப்பில் ரூ.25 கோடியை பரிசாக பெற்றார்.
தற்போது சன்னியூ லைஸாருக்கு மற்றொரு மரகக்கல் கிடைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு மேலும் ஒரு மரகக்கல் கிடைத்ததாகவும் அந்தக் கல்லை அரசாங்கம் பெற்றுக்கொண்டு அவருக்கு 7.74 தான்சானியா பவுண்டுகளை பரிசாகக் கொடுத்து இருப்பதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்க டாலரின் அதன் மதிப்பு 3.35 மில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை லைஸார் 20.43 பவுண்டு மற்றும் 11.26 பவுண்டு எடையுள்ள மரகதக் கற்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து இருப்பதாக அந்நாட்டின் கனிம அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து லைஸார் செய்தியாளர்களிடம் கூறும்போது எனக்கு 30 குழந்கைள் இருக்கிறார்கள். அவர்களின் கல்விக்கு பயன்படும் வகையில் வடக்கு மன்யாரா பகுதியில் ஒரு புதிய பள்ளிக் கூடத்தை சுகாதாரமான முறையில் உருவாக்க இருக்கிறேன். மேலும் நான் மேற்கொள்கிற சம்பாத்தியம் எனது குடும்பத்திற்கு பத்தாது. எனவே 2 ஆயிரம் மாடுகளை வாங்கி பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்து இருக்கிறார். ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம், அடுத்தடுத்தும் இப்படி நடக்குமா எனப் பலரும் லைஸாரைப் பார்த்து பொறாமை கொள்ளவும் செய்கின்றனர்.