விஷால்-ஆர்யா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,October 16 2020]

நடிகர் விஷால் தற்போது ’சக்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விரைவில் அவர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும்

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

More News

அடுத்தகட்ட பணியை தொடங்கிய 'சுல்தான்' படக்குழு: கார்த்தி ரசிகர்கள் குஷி!

கார்த்தி நடிப்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகி வந்த'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை கார்த்தி தனது டுவிட்டரில் உறுதி செய்தார் என்ற செய்தியை பார்த்தோம். 

'ஐத்தலக்கா': அனிருத்தின் தரை லோக்கல் குத்து பாட்டு

ராக்ஸ்டார் அனிருத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒட்டுமொத்த திரையுலகினரும் இசை ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் 

கேபிரில்லாவை முதுகில் சுமந்த சுரேஷ்: நாளுக்கு நாள் அதிகமாகும் ஹீரோயிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் 3 போட்டியாளர்களை அதிக நேரம் முதுகில் சுமந்து நிற்க வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரில்லா

நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய மாடல் அழகி: சென்னையில் பரபரப்பு!

சென்னை அருகே நள்ளிரவில் குடிபோதையில் மாடல் அழகி ஒருவர் காரை சாலையில் தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'800' படத்திற்கு ஆதரவு: விஜய்சேதுபதிக்கு வலை விரிக்கின்றார்களா குஷ்பு, அண்ணாமலை? 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.