close
Choose your channels

'800' படத்திற்கு ஆதரவு: விஜய்சேதுபதிக்கு வலை விரிக்கின்றார்களா குஷ்பு, அண்ணாமலை? 

Friday, October 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குறிப்பாக பாரதிராஜா, சீமான், கவிஞர் தாமரை, சீனு ராமசாமி, வைரமுத்து உள்ளிட்டோர் இதுகுறித்து அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகை குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தில், திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை இதுகுறித்து கூறிய போது ’விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றும் ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க அனைத்து உரிமையும் உண்டு என்றும் விஜய் சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் இதில் அரசியல் கலப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளார்

குஷ்பு மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் ‘800’ படத்திற்கு திடீரென ஆதரவு தெரிவித்திருப்பதால் விஜய்சேதுபதிக்கு வலை விரிக்கப்படுகிறதா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.