விஜய் கையில் 'கத்தி': அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

  • IndiaGlitz, [Tuesday,September 24 2019]

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக ரிலீசுக்கு முன்னரோ அல்லது ரிலீசுக்கு பின்னரோ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனைகள் படத்திற்கு இலவச புரமோஷன்களாக இருந்தாலும் இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் டென்ஷனும் எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் முளைத்துள்ளது. விஜய்யின் பேச்சை அதிமுக மற்றும் பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். திடீரென இரண்டு மாதங்கள் கழித்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக ஒரு கூட்டம் போராட்டம் நடத்தி வருகின்றது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ’பிகில்’ திரைப்படத்தின் போஸ்டர்களில் விஜய் கத்தியோடு இருப்பதை பார்த்தேன். இந்த போஸ்டரை பார்த்து அவரது ரசிகர்களும் கத்தியை தூக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார். மேலும் ’சினிமா மூலம் எம்ஜிஆர் போல நல்ல கருத்துகளை விஜய் பரப்ப வேண்டும்’ என்று கூறினார். இதற்கு விஜய் ரசிகர்கள், ‘எம்ஜிஆர் கத்தியோடு பல படங்களில் நடித்த போஸ்டர்களை வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News

சயிரா நரசிம்மரெட்டி' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

ஒரு பெரிய ஸ்டாரின் திரைப்படம் வெளிவரும்போது திடீர்ச்சிக்கல் ஏற்படுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாகி வருகிறது. பல திரைப்படங்கள் தற்போது கோர்ட் படியேறிய பின்னர் தான் ரிலீஸ் ஆகின்றது

'வெப் சீரீஸ்' உலகில் காலடி வைக்கும் 'பிகில்' நடிகர்

தற்போதைய டெக்னாலஜி உலகில் திரைப்படங்களுக்கு இணையாக வெப் சீரீஸ் தயாராகி வருகிறது. பெரிய திரையில் உள்ள பல பிரபலங்கள் பலர் தற்போது வெப் சீரீஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்

படுக்கையறை ரகசியங்களை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த நடிகை சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லட்சுமி மஞ்சு எடுத்த பேட்டியின்போது

தந்தையின் டைட்டிலில் ராதிகாவுக்கு கிடைத்த புதிய பட்டம்!

பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் நடித்துள்ள 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

'பிகில்' ஆடியோ விழா: அதிமுகவை அடுத்து சிவாஜி ரசிகர்களும் கண்டனம்

'பிகில்' திரைப்பட விழாவில் விஜய் பேசியது குறித்து அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதே விழாவில் நடிகர் விவேக் பேசியது குறித்து தற்போது சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.