'தர்பார்' பட நஷ்டம் குறித்து தமிழக அமைச்சர் அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் வசூலை வாரி குவித்ததாகவும் கூறப்பட்டது

ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக ஒரு சில விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டு முன் கூடி தங்களுக்குள் ’தர்பார்’ படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இது குறித்து ரஜினியிடம் தாங்கள் முறையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் ஒரு சில விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன் இருந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ’தர்பார்’ பட நஷ்டம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது, ’தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும் என்று கூறியுள்ளார்

நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அதற்கு தகுந்த ஆதாரம் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆதாரங்களை விநியோகஸ்தர்கள் கொண்டு செல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த கொலை.. ஆதாரங்களுடன் கைது செய்த போலீஸ்..!

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் இளைஞர் ஒருவரை கொன்று அவரது சடலத்தை பாபநாசம் திரைப்பட பாணியில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சீனாவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு 242 பேர் வந்துள்ளனர். இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

சிவகார்த்திகேயனின் 14வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு கொரோனா பாதிப்பா? 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல இயக்குனரின் தயாரிப்பில் யோகிபாபு: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தி ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே