திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து திரையரங்குகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை’ என்று கூறினார்.

’கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பியது பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு’ என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ’ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் எதுவும் கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் இந்த கருத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சரின் இந்த பேட்டியால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடி ரிலீசுக்கு தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது: கமல் வாழ்த்து கூறியது யாருக்கு?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக

நித்தியானந்தா மீது அன்பை வெளிப்படுத்திய மீரா மிதுன்: கைலாசாவுக்கு செல்ல ஆசை என டுவீட்

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை தான் உருவாகியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

கார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில்