கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவுரை

  • IndiaGlitz, [Thursday,February 21 2019]

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் கட்சியை அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென கமல்ஹாசனின் நலவிரும்பியாக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் அறிவுரை ஒன்றை அவருக்கு வழங்கியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:

கமல்ஹாசன் ஒரு சிறந்த தமிழ் நடிகர். அனைத்து திறமையையும் கொண்டவர். யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு மக்களை சந்திக்க கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு சரியாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இன்றைய சூழ்நிலையில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதை அவருடைய நலவிரும்பிகள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக போட்டியிட்டால் தேர்தலுக்கு பின் அவர் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாவார். எதையும் ஆராய்ந்து செய்யக்கூடிய திறமை படைத்த கமல்ஹாசன், யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் இந்த தவறான முடிவை எடுத்துள்ளார் என்பதே எனது கருத்து

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

More News

திட்டமிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் ஆகும் 'காஞ்சனா 3'

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒரே தொகுதியில் களமிறங்கும் கனிமொழி, தமிழிசை, ராதிகா?

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் ஸ்டெர்லைட் பிரச்சனை தொகுதியான தூத்துகுடி இம்முறை நட்சத்திர தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட

'தல'க்கு பதில் 'தளபதி': சத்யஜோதியுடன் இணையும் சிவா?

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சிவா, மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே!

நடிகர் மாதவன் இயக்கி  நடித்து வந்த 'ராக்கெட்டரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.