close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.