10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,April 20 2020]

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் இந்த மதிப்பெண்களை வைத்துதான் பதினோராம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் காலேஜ் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர முடியும் என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை கண்டிப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில்தான் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதே போன்ற ஒரு முடிவைத்தான் மத்திய அரசும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எடுத்துள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படாது, ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தபின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மே 3ஆம் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து அறிவிப்பும் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அட்டவணையும் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

More News

பெப்சி அமைப்புக்கு இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த தொகை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

அதர்வா வெளியிட்ட தளபதி விஜய்யின் வெளிவராத புகைப்படம்!

தளபதி விஜய் மற்றும் நடிகர் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஆகிய இருவரும் சமீபத்தில் உறவினர் ஆனார்கள் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யின் உறவினரும் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு.

கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 3 வரை ஊரடங்கில் தளர்வு இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனாவால் இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் இன்று முதல் ஒருசில துறைகளுக்கு

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வௌவால்கள்!!! இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன???

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய வைராலஜி ஆராய்ச்சிக் கழகம் இரண்டும் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழ்கின்ற 25 வகையான வௌவால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன.