close
Choose your channels

தமிழகத்தில் வசூலை வாரி குவிக்கும் மலையாள படம்.. நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

Thursday, February 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ என்ற திரைப்படம் தமிழகத்திலும் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அதன் படக்குழுவினரை நேரில் அழைத்த அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மலையாள திரை உலகில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் அடிக்கடி வெளியாகி வருவதை அடுத்து அப்படி ஒரு படம் தான் ’மஞ்சும்மாள் பாய்ஸ்’. இந்த படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் 100 கோடி ரூபாயை நெருங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் உருவான ’குணா’ படத்தில் இடம்பெற்ற குணா குகை தான் இந்த படத்தின் முக்கிய கதையம்சம் என்றும் ’குணா’ படத்திலுள்ள சில பாடல்கள் மற்றும் காட்சிகளையும் இந்த படத்தில் பட குழுவினர் பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அது மட்டும் இன்றி நேற்று ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ படக்குழுவினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக ’மஞ்சும்மாள் பாய்ஸ்’-ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment