கமல் கட்சிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

  • IndiaGlitz, [Monday,July 08 2019]

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஜூலை 8ஆம் தேதி அதாவது இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது. இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் 'அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனின் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வைகோவின் தேசத்துரோக வழக்கு, நந்தினி கைது உள்பட எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், இந்த கூட்டத்திற்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சந்தேகப்படும் சாக்சி: சமாதானப்படுத்தும் கவின்!

கவின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கமாவதாக சாக்சி சந்தேகப்பட, அவரை சமாதானப்படுத்த கவின் முயற்சி செய்வதாக இன்றைய அடுத்த புரமோ வீடியோ வெளிவந்துள்ளது

ஹரிஷ் கல்யாண் அடுத்த பட நாயகி திடீர் மாற்றம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன் பின்னர் 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்தார்.

மீராமிதுனின் அடுத்த டார்கெட் லாஸ்லியாவா? 

மீராமிதுன் 16வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு ரணகளமாகிவிட்டது தெரிந்ததே.

20 வயது இளம் நடிகர் பரிதாப பலி: மருத்துவ சிகிச்சையில் தவறா?

20 வயது இளம் நடிகர் ஒருவர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்தபோது தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்

இன்று தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்காத அப்டேட்: அர்ச்சனா ஆச்சரிய தகவல்

'தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் புரமோஷன் மற்றும் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது