close
Choose your channels

இன்று தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்காத அப்டேட்: அர்ச்சனா ஆச்சரிய தகவல்

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் புரமோஷன் மற்றும் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை மற்றும் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை ஏற்கனவே மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகிவிட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் வெளியாகி ரசிகர்களை திருப்தி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் மேலும் ஒரு அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அப்டேட் பிகில்' படத்தின் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்காத அதே நேரத்தில் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அப்படி என்ன அப்டேட்டாக இருக்கும் என்பதே தற்போது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.