கொரோனாவுக்கே டஃப் கெடுக்கும் புது வைரஸ்… சென்னை, மதுரையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பரபரப்பு!!!

 

கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலகமே தவித்து வரும் நிலையில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வைரஸ் சென்னை மற்றும் மதுரையில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. “மிஸ்-சி” எனப்படும் இந்த புதிய வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் இந்தியாவில் கடந்த ஜுன் மாதத்தில் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டறியப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்குமுன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்த வைரஸ் குழந்தைகளிடம் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுவாக பிறந்த குழந்தை முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். மேலும் இந்த வைரஸ் நோயை அழற்சி நோய் அதாவது வீக்கநோய் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிகளவு நோய் எதிர்ப்புசக்தி அவர்களின் உடலில் சுரந்து அதனால் நுரையீரலில் வீக்கநோய் ஏற்படுவதை சைட்டோகைன் என மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

அதேபோன்ற ஒரு வைரஸ் நோய்தான் “மிஸ்-சி” எனக் கூறுகிறார் மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் பாலசங்கர். மேலும் “இந்த மிஸ்-சி நோய் கொரோனா பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தலாம்” எனவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த நோய் தாக்கும்போது உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்து அதனால் மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நோய் அறிகுறிகள் இருக்கும்போதே பெற்றோர்கள் எச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டும் என பாலசங்கர் எச்சரிக்கை செய்துள்ளார். இதுவரை மிஸ்-சி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 55 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதேபோல மதுரை மருத்துவமனையில் 12 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நோய் பாதிப்புடைய குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும், கண்கள், உள்ளங்கை, பாதம், நாக்கு, வாய்ப்பகுதிகள் சிவக்கும், உதட்டில் வெடிப்பு ஏற்படும், தோல் பகுதியில் சிவப்பு நிறத்தில் திட்டுகள் தெரியும். மேலும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருக்கும் என மிஸ்-சி நோயின் அறிகுறிகளை மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர். எனவே குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் அதிலும் கொரோனா பாதித்த குழந்தையாக இருந்தால் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

பொதுவாக இந்நோய் கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலில் உள்ள பல உறுப்புகளை சேதப்படுத்தும், அதோடு ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் அபாயமும் இந்நோயில் இருக்கிறது. ஒருகாலத்தில் இந்நோய்க்கு மருந்துகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இந்நோயை குணப்படுத்துவது மிக எளிமை என்றும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் மதுரையில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்ட நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகளைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

 

 

More News

ஆடு மேய்த்தற்காக மற்றவர்கள் காலில் விழ வைத்தச் சம்பவம்… பட்டியல் இனத்தவருக்கு நேர்ந்த கொடுமை!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடு மேய்த்த குற்றத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பால்ராஜ்

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த டாக்டர்: உடல்நலமின்றி வெளியேறிய போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளும் தினந்தோறும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகிய கமல், தனுஷ் பட நடிகை!

இயக்குனர் சசி இயக்கிய 'பூ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி, அதன் பின்னர் சரத்குமாரின் 'சென்னையில் ஒரு நாள்' தனுஷின் 'மரியான்' கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்'

பாஜகவில் சேருகிறாரா விஜய் தந்தை? அவரே அளித்த விளக்கம்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் தேர்வு செய்யப்பட்ட பின் பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தோனி மகளை மிரட்டிய 16 வயது சிறுவன் கைது குறித்து நடிகர் மாதவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.