close
Choose your channels

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா முன்னாள் மிஸ் இந்திய அழகி? மாஸ் தகவல்..!

Sunday, October 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் நாளை மறுநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும், விஜய் ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒரு சிலர் அடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் டைட்டில் வென்ற நடிகை மீனாட்சி சவுத்ரி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும், விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 68’ திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி இணையும் தகவல் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment