தமிழக எம்.எல்.ஏ அடுத்து சினிமாவில் அடுத்த பதவி

  • IndiaGlitz, [Friday,June 17 2016]

நகைச்சுவை நடிகர், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர், தமிழக சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ என பிசியாக இருக்கும் நடிகர் கருணாஸ் தற்போது புதிய அவதாரமாக இசையமைப்பு பணியையும் ஆரம்பித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்து பிரபலமாக இருப்பது வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப்'பை மையமாக வைத்து ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்குத்தான் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு 'பகிரி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'பகிரி' என்றால் 'வாட்ஸ் அப்' என்று அர்த்தமாம்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த பிரபு ரண்வீரன் நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்தில் ஆந்திர அழகி ஷர்வியா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் உள்பட பல இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்வண்ணன் என்பவர் இயக்குகிறார்.

சென்னைக்கு வேலை தேடி வரும் ஒரு இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்களை நகைச்சுவையாக இந்த படத்தில் கூறவிருப்பதாக இயக்குனர் கார்வண்ணன் தெரிவித்துள்ளார்.

More News

'கபாலி' இயக்குனர் சிங்கப்பூர் செல்வது ஏன்? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனவர் இயக்குனர் பா.ரஞ்சித்...

'பாகுபலி', '2.0' படங்களைவிட பெரிய பட்ஜெட்டில் எனது படம் : சுந்தர் சி

மறைந்த பிரபல இயக்குனர் ராம.நாராயணன் உருவாக்கிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

10 வருடங்களுக்கு பின்பும் மாறாத பாசம். விஜய்யை பாராட்டிய பிரபல வில்லன்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம்...

இன்று வெளியாகும் 'கபாலி' டீசரில் என்ன ஸ்பெஷல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் இரண்டாவது டீசர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'அஜித் 57' படத்தின் வில்லன் இவரா? புதிய தகவல்

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் சூப்பர் வில்லனாக நடித்த கபீர்சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது...