போதையில் ராணுவ வாகனத்தையே மறித்த மாடல் அழகி… தீயாய் பரவும் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,September 11 2021]

டெல்லி சாலையில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றை இளம்பெண் ஒருவர் மறித்துக்கொண்டு ரகளை செய்கிறார். அவருடைய ஹேண்ட்பேக்கில் இருந்து மதுபாட்டில் கீழே விழுந்து உடைகிறது. இதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அந்தக் காட்சி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

டெல்லி குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றை இளம்பெண் ஒருவர் மறித்துக்கொண்டு அந்த வாகனத்தின் பேணட்டின் மீது அமர்ந்து போன் பேசுகிறார். இதனால் வாகனத்தில் இருந்த இராணுவ வீரர்கள் ஹார்ன் அடித்து அவரை நகரச் சொல்கின்றனர். ஆனால் இதைக் காதில் வாங்காத அந்த இளம்பெண் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் ஹெட்லைட்டை எட்டி உதைக்கிறார்.

மதுபோதையில் இளம்பெண் செய்யும் இந்த ரகளைக் காட்சிகளை அருகில் இருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துகொள்கின்றனர். பின்னர் ஒருவழியாக அந்தப்பெண் சாலையை விட்டு நகர்ந்து சென்றபின் அந்த இராணுவ வாகனம் கிளம்பி செல்கிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உள்ளூர் போலீஸ் அந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் அந்த இளம்பெண் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும் மாடல் அழகியாக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இராணுவ வாகனத்தையே வழிமறித்த இளம்பெண்ணின் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாநாடு' ரிலீஸ் தேதி அறிவிப்பு: தீபாவளிக்கு மும்முனை போட்டியா?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது 

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தகவலை அறிவித்த விஷால்!

விஷால் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தூ.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும்

என்ன மாப்பிள்ளைங்களா, கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடலாமா? 'பகைவனுக்கு அருள்வாய்' டீசர்

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த படங்களில் ஒன்று 'பகைவனுக்கு அருள்வாய்'என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

'பொன்னியின் செல்வன்' புரொஜக்டை ஆரம்பித்த ரஜினி மகள்: வைரல் புகைப்படங்கள்

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது

என்னோட உயிர் இப்படி தான் போகணும்: வடிவேலு பேட்டி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து பிரச்சனைகளை முடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.