close
Choose your channels

உன் பயணங்கள் முடிவதில்லை. தெரிஞ்சு போச்சு.. மோகனின் 'ஹரா' டிரைலர்..!

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன் நடித்த ‘ஹரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 80, 90களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காத நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகியுள்ள திரைப்படம் ‘ஹரா’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் மோகனின் அதிரடி ஆக்சன் காட்சிகள், ஆவேசமான காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த ட்ரெய்லர் மிரட்டலாக உள்ளதாக கூறப்படுகிறது. தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்கும் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

மோகன் உடன் அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் 93 வயதான கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் ’நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் நடித்த கேரக்டர் தான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment