தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பில் தமிழகம் புதிய உச்சத்தை அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 805ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது இன்றுதான். மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள் எண்ணிக்கை 93 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 805 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 549பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 407 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். இதனையடுத்து கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,731ஆக உயர்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

More News

தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்!

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

நித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா??? மொலோசியா குடியரசு பிறந்த கதை!!!

பண்டைய கிரேக்க வரலாற்றில் மொலோசியா என்ற நகரம் மிகவும் பிரபலமானது

கொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா??? ஷுக்களில்??? தலைமுடியில்??? மருத்துவர்களின் விளக்கம்!!!

கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா???

இந்தியாவில் கடந்த சில தினங்களாக “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை” என்ற தகவல் சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

அச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா???

ஆண்டுதோறும் இந்திய எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் பாகிஸ்தான் மாநிலங்களில் இருந்து பாலைவன வெட்டிக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம்