மனிதம் வென்ற இடம்… உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மக்கள் செய்த காரியம்!

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்களே மாஸ்கோ நகரில் நேற்று அணி வகுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.

முன்னதாக உக்ரைனில் இராணுவ ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, அந்நாடு நேட்டா அமைப்பில் இணையக் கூடாது எனக் கூறிக்கொண்டு உக்ரைனுக்குள்ளே நுழைந்த ரஷ்ய ராணுவம் அந்நாட்டின் விமான நிலையங்களையும் ஆயுதத் தளவாடங்களையும் அடித்தொழித்தது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைனுக்கு தற்போது சுவீடன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பெர்லின் போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபர் புடினுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களே அணி திரண்டிருக்கும் காட்சி பலருக்கும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று மறைந்த எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ப்சோவ்வின் 7 ஆவது நினைவுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திடீரென உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

மேலும் போரை நிறுத்துங்கள் என்று புடினுக்கு எதிரான வாசகங்களையும் அந்த மக்கள் தங்களது கைகளில் ஏந்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களை அதிரடியாக கலைத்த அந்நாட்டு காவல்துறை கிட்டத்தட்ட 2,000 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதற்கு முன்பே உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகவும் இதுவரை 5,250 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களை அந்நாட்டு போலீசார் கலைய செய்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படக்காட்சிகள் லீக் ஆகிவிட்டதா? அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

பிரபல இயக்குனரின் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் ஹன்சிகா!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரின் அடுத்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக

'வலிமை' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்காக உணவு, தங்குமிடம் ஏற்பாடு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் படித்து வரும் ஏராளமான இந்திய மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

ராகுல் காந்தி எனது தம்பி': முதலமைச்சர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திராவிட முறைப்படி எனது தம்பி என அழைக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார் .