இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: 2வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 கட்ட ஊரடங்கு முடிவடைந்து நான்காம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்தியாவில் தற்போது 1,00,328 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4630 பேர் ஒருநாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 131 பேர் மரணம் அடைந்துள்ளதாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3156 என்பதும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 39233 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 35,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 11760 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் குஜராத்தில் 11746 பேர்களும், நான்காவது இடத்தில் டெல்லியில் 10054 பேர்களும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தானில் 5507 பெர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிரஞ்சீவி படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தை மிஸ் செய்த த்ரிஷா?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட 'பேட்ட' நடிகருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றதால் 14 நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்

பூமியில் மட்டுமல்ல; சூரியனிலும் லாக்டவுன்தான்!!! கடும் எச்சரிக்கை விடுக்கும் நாசா!!!

கொரோனா பாதிப்பினால் உலகமே தலைகீழாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அடுத்த வருடம் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்??? ஆருடம் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!!!

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மந்தத்தை விடவும் 2021 இல் அதீத மந்தநிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கோல்ட்ஸ்மேன் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்

கொரோனா சிகிச்சை: மிகவும் நம்பப்பட்ட Remdesivir குறைந்த இரத்த அழுத்தத்தை தூண்டுகிறது!!! அதிர்ச்சி தகவல்!!!

அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தைப் பயன்படுத்தி அதிக நோயாளிகளை குணப்படுத்தியது.