1000ஐ தாண்டியது ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 971 இருந்த நிலையில் தற்போது அது 1,047ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரத்தை அடுத்து சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மண்டலமும் ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவிக நகரில் 737 பேர்களும், தேனாம்பேட்டையில் 640 பேர்களும், அண்ணாநகரில் 493 பேர்களும், வளசரவாக்கத்தில் 483 பேர்களும், தண்டையார் பேட்டையில் 474 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடையாறு பகுதியில் 316 பேர்களும், அம்பத்தூரில் 285 பேர்களும், மணலியில் 133 பேர்களும், மாதவரத்தில் 92 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் இதுவரை 5946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 1071 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

தயவுசெய்து இதுமாதிரி யாரும் செய்யாதீங்க: காயமடைந்த பிரபல நடிகரின் வீடியோ!

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு, 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு: தட்டிக்கேட்ட அத்தையை கொலை செய்த சென்னை வாலிபர்

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த சென்னை வாலிபர் ஒருவரை அவருடைய அத்தை தட்டிக் கேட்டதை அடுத்து, அத்தையை அந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

கொரோனா தடுப்பு மையமாக மாறும் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம்!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிகவும் முக்கியமான ஸ்டேடியம் மும்பை வான்கடே ஸ்டேடியம் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகள்

மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி செய்த வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாஸ்க் அணிவது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் கட்டாயமாக உள்ளது.