வறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா?

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

பள்ளியில் படிக்கும் 2 மகள்களை விபச்சாரத்தில் ஒரு பெண் ஈடுபடுத்தியதாகவும், அதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் லதா என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வறுமையில் இருந்த லதா, தனது மகள்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கியுள்ளார். இதற்கு உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குறிப்பிட்ட வீட்டில் அடிக்கடி ஆண்கள் சென்று வருவது குறித்து சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 பேரை கைது செய்தனர். ஒருவர் கூலித் தொழிலாளி என்றும் இன்னொருவர் அந்த பகுதி காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதனை அடுத்து லதாவின் மகள்கள் உள்பட நான்கு சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் கணவர், லதா மற்றும் கூலி தொழிலாளி ஆகியோர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வறுமை காரணமாக பள்ளியில் படிக்கும் மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

அசோக்செல்வன் எப்படி இருக்கார்? நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ் பெற்ற பாடகி பிரகதி அதன் பின்னர் பாலாவின் 'பரதேசி' உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடினார்.

'விக்ரம் 60' படத்திற்கான லொகேஷனை முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

உலகிலேயே மிக குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவி… WHO வின் புதிய அறிவிப்பு!!!

பொருளாதார கட்டமைப்பில்லாத மற்றும் மருத்துவக் கட்டமைப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் இயலாத நிலைமை இருந்து வருகிறது.

தமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!!!

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானியை கடத்தி வைத்துக் கொண்டு அவருடைய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய பிக்பாஸ் பெண் போட்டியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது