close
Choose your channels

'மெளன ராகம்' சீரியல் ஜோடியின் 'எங்கேஜ்மெண்ட்'.. அசத்தல் புகைப்படங்கள்.. புரியாமல் குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, April 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மெளன ராகம்’ சீரியலில் நடித்த ஜோடி தற்போது ’எங்கேஜ்மெண்ட்’ என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ள நிலையில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து இருவரும் உண்மையாகவே திருமணம் செய்து கொள்வதாக நினைத்து பலர் புரியாமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ’மெளன ராகம்’ என்பதும் இரண்டு பாகமாக வெளியான இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த சீரியலில் ரவீனா, ஷில்பா, சல்மான் உள்பட பலர் நடித்திருந்த நிலையில் இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அதன் பிறகு இந்த சீரியலில் உள்ள பலர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கமிட்டாகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மெளன ராகம்’ சீரியலில் நடித்த ஷில்பா மற்றும் சல்மான் ஆகிய இருவரும் ’எங்கேஜ்மெண்ட்’ என்ற புதிய சீரியலில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலுக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மணமகன், மணமகள் கெட்டப்பில் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து உண்மையாகவே இருவருக்கும் ’எங்கேஜ்மெண்ட்’ ஆகிவிட்டதா என்று நினைத்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ’எங்கேஜ்மெண்ட்’ என்ற டைட்டில் உள்ள சீரியலுக்கு தான் இவர்கள் இந்த போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை எதிர்காலத்தில் உண்மையாகவே இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.