close
Choose your channels

'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா? இன்று இரவு பிரஸ்மீட்

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியிலிருந்து தல தோனி ஒய்வுபெற்ற நிலையில் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறவிருப்பதாக இன்றைய பிரஸ்மீட்டில் அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கவிருப்பதை மறைமுகமாக கேப்டன் விராத் கோஹ்லி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலேயா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தோனியுடன் சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதை நினைவு கூர்ந்த விராட் கோலி ‘தோனியுடன் விளையாடிய அந்த போட்டியை தன்னால் மறக்க முடியாது என்றும், அது ஒரு ஸ்பெஷல் நைட் என்றும், தோனி தன்னை ஃபிட்நெஸ் டெஸ்ட் போன்று ஓட வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தோனிக்கு விடைகொடுத்து அனுப்பும் டுவீட்டாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.