நடிகை ரியா சக்ரவர்த்தியால் மும்பை நபருக்கு நேர்ந்த தர்மசங்கடம்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய தற்கொலைக்கு நடிகையும், அவருடைய முன்னாள் காதலியுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என்று பாலிவுட் திரையுலகில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. சுஷாந்தின் தந்தையும் ரியா சக்கரவர்த்தி மீது காவல் துறையில் புகார் அளித்து உள்ளார் என்பதும் காவல்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியை விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலைக்கு ரியா சக்கரவர்த்தியும் ஒரு காரணம் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவருடைய மொபைல் எண்ணை கண்டுபிடித்து அவருக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சாகர் சர்வே என்பவர் மொபைல் எண்ணூம், ரியா சக்கரவர்த்தியின் மொபைல் எண்ணும் ஒரே ஒரு எண் மட்டுமே வித்தியாசமாக கொண்டது. இதனை அடுத்து ரியா சக்கரவர்த்திக்கு அனுப்பவேண்டிய கண்டனங்களை சுஷாந்த் ரசிகர்கள் சாகருக்கு அனுப்பி வருகின்றனர் சாகருக்கு தினந்தோற்றும் 150க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், வீடியோ கால்கள் ஆகியவை வருவதாகவும், தான் ரியா இல்லை என்று அவர் பதில் அளித்தும், அதனை கண்டுகொள்ளாத ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில் மெசேஜ்களை அனுப்பி கொண்டிருப்பதாகவும் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் சாகர் கூறியுள்ளார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக தனக்கு இவ்வாறான மெசேஜ்கள் வந்து கொண்டிருப்பதாக சாகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தின் சில  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் 61 வருட திரையுலக பயணம்: வாழ்த்து தெரிவித்த இமயமும், மகனும்!

கடந்த 1959 ஆம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலகநாயகன் கமலஹாசன் தற்போது 61 ஆண்டு திரையுலக பயணத்தை முடித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலத்தோடு இன்ப அதிர்ச்சியாக ரூ.100 ஐ ஒட்டி வழங்கிய பெண்!!!

தென்மேற்கு பருவமழையால் தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

25 வருடங்களுக்குப்பின் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி நஷ்டஈடு!!! பரப்பான பின்னணி!!!

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு நஷ்ட ஈட்டுத்தொகையாக ரூ.1.30 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்-பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை!!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.