close
Choose your channels

'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்': பிரபல இசையமைப்பாளரிடம் கூறிய அஜித்

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் உள்ள ஒவ்வொரு கலைஞனுக்கு அஜித் படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். ஒருசிலருக்கு இந்த அதிர்ஷ்டம் உடனேயும், சிலருக்கு பல வருடங்கள் கழித்தும் கிடைப்பதுண்டு

அந்த வகையில் சற்றுமுன் அஜித்தை பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த சந்திப்பு ஒரு உண்மையான ரசிகரின் சந்திப்பு போன்றது. இந்த சந்திப்பின்போது அவர் எல்லோரிடம் கூறுவது போல், ''நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று என்னிடமும் கூறியதாக பதிவு செய்ததோடு இன்று இனிமையான ஞாயிற்றுக்கிழமை என்றும் கூறியுள்ளார்.

தற்போது 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா பணியாற்றி வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் ஜிப்ரான் பணிபுரிவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.