close
Choose your channels

'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்; ரசிகர்கள் குஷி..!

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் விறுவிறுப்பாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இந்த படத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி இசை பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டது என்றும் டால்பி 9.1.4 தொழில்நுட்பத்தில் இந்த படத்தின் பின்னணி இசை உருவாகி வருவதாகவும் விரைவில் திரையரங்குகளில் இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment