இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஒரு மினி நூலகத்தையே அனுப்பிய பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,August 05 2022]

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் வசந்தனுக்கு பிரபலம் ஒருவர் புத்தகங்கள் அனுப்பி இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’சுப்பிரமணியபுரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன் அதன் பின் ஒரு சில திரைப் படங்களுக்கு இசையமைத்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், சமூக கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நடிகர் இயக்குனர் மற்றும் அரசியல்வாதி சீமானுடன் ஜேம்ஸ் வசந்தனுக்கு நெருங்கிய நட்பு உள்ளது என்பது அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நேற்று தோழர் சீமானுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது அவர் பெருஞ்சித்திரனார் நூல்களை அனுப்பி வைக்கிறேன் வாசித்து பாருங்கள் என்றார். ஒரு புத்தகத்தை எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு நூலகமே வந்து இறங்கியது என்று பதிவு செய்து ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். 

அந்த புகைப்படத்தில் ஏராளமான புத்தகங்கள்  உள்ளது என்பதும், அவை அனைத்துமே பெருஞ்சித்திரனார் எழுதிய புத்தகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகை? அஜித், சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளையும் சீரியல் நடிகர்தான்!

விஜய் டிவி உள்பட முன்னணி தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வரும் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

'பாத்துக்கலாம்' : அதிதிஷங்கரை மறைமுகமாக தாக்குகிறாரா தமிழ் நடிகை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதை 'பாத்துக்கலாம்' என தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது

ஒரே பட வெற்றி: ரஜினி, அஜித், விஜய்யை சம்பளத்தில் முந்திய கமல்ஹாசன்?

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த ஒரே படத்தின் வெற்றியால் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களான ரஜினிகாந்த்,

விஜய்தேவரகொண்டாவின் 'லைகர்' சென்சார், ரன்னிங் டைம் தகவல்: எத்தனை சண்டை? எத்தனை பாடல்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.