அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை: சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’பத்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முழங்கால் அளவு தண்ணீர், மின்வெட்டு ஆகியவை வழக்கமாக உள்ளது. எங்கள் பகுதி வரலாற்று ரீதியாக ஏரி அல்லது தாழ்வான பகுதி அல்ல. சென்னையின் மற்ற பகுதியை விட எங்கள் பகுதியில் திறந்தவெளி நிலங்கள் குளங்கள் உள்ளது. ஆனால் வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவை தான் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஒன்று சேர்வதற்கு வழி வகுத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நோய் ஏற்பட்டு சில சமயம் மரணமும் ஏற்படுகிறது.

ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும் மீட்பு மற்றும் முக்கிய தேவைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். மீட்பு பணிகளுக்காக படகு மற்றும் சில பம்புகள் நாங்கள் வைத்திருக்கிறோம். சென்னை வாசிகளின் நம்பிக்கைக்கு எனது பாராட்டுக்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் நிலவுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது..

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்று நம்புகிறேன், பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

கோடிகளில் ஏன் சந்திராயன்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்துங்கள்: பார்த்திபன்

தண்ணீர் இருக்கிறதா? என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை

புயல் பாதிப்பு எதிரொலி: மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்..!

சென்னை உள்பட ஒரு சில மாவட்ட  மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு

கல்யாணம் மிகப்பெரிய பாதுகாப்பு.. அந்த அங்கீகாரம் கிடைச்சா மட்டும் தான் வாழ்க்கை: 'கண்ணகி' டிரைலர்..

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் உட்பட 4 முக்கிய பெண் கேரக்டர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட 'கண்ணகி' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோடான கோடி நன்றி: முன்னாள் மனைவி ஐஸ்வர்யா படம் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு..!

முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.

மழைக்காலத்தில் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்கள்.. விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி..!

மழைக்காலத்தில் தூய்மை பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டு விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர்.