close
Choose your channels

'காக்கா - கழுகு' விவகாரத்தை அப்படியே விட்ருக்கலாம், ரஜினி தப்பு செய்திட்டார்: பிரபல இசையமைப்பாளர்..!

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த ’லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் தான் பேசிய காக்கா கழுகு கதையில் காக்கா என்பதை விஜய்யை வைத்து நான் சொன்னதாக அனைவரும் தவறாக நினைத்து விட்டனர் என்றும், அவரை நினைத்து தான் சொல்லவில்லை என்றும், எனவே இரு தரப்பு ரசிகர்களும் இதுகுறித்து எந்தவித சண்டையும் போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் கூறிய போது ரஜினி கூறிய காக்கா கழுகு கதையில் விஜய்யைதான் அவர் காக்கா என்று கூறியுள்ளார், இது உலகத்துக்கே தெரியும், இன்று அவர் மறுப்பதால் அது உண்மையாகி விடாது.

இன்று அரசியலுக்கு வந்த விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறிய நிலையில் காக்கா கழுகு கதையை அப்படியே விட்டுருந்து இருக்கலாம், நான் அவ்வாறு சொல்லவில்லை என மறுத்து சொல்லும் போது தான் அவர் பலவீனம் ஆகிறார். ரஜினி இந்த விஷயத்தில் தவறு செய்து விட்டார் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.