மிஷ்கினின் 'பிசாசு 2' ரிலீஸ் தள்ளி போகிறதா? புதிய ரிலீஸ் தேதி என்ன?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த ‘பிசாசு 2’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பிசாசு 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விக்ரமின் ’கோப்ரா’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஏராளமான தியேட்டர்கள் புக் ஆகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ‘பிசாசு 2’ படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சை கேளு’ என்ற பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments