close
Choose your channels

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி.. டைட்டில் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Friday, December 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் உருவான ’பிசாசு 2’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'ட்ரெயின்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவிள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி நடித்த 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மலேசியாவில் முடிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.