இந்த நடிகையின் வயிற்றில் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்.. மிஷ்கின் உணர்ச்சிகர பேச்சு..!

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

அந்த நடிகையின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்றும் என்னை ஒரு தாய் போல் அவர் பார்த்துக் கொள்வார் என்றும் இயக்குனர் மிஷ்கின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மிஷ்கின் சகோதரர் ஆதித்யா ஏற்கனவே ’சவரக்கத்தி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது ’டெவில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதி அருண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் மிஷ்கின் உணர்ச்சிகரமாக பேசினார். ’இந்த படத்தின் நாயகி பூர்ணா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. என் வாழ்க்கையில் அவர் ஒரு முக்கியமான பெண். அவர் வயிற்றில் அடுத்த ஜென்மத்தில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன். என்னை அவர் ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்வார். என் குழந்தை விட அவருடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

எனது விருப்பம் அவர் சாகும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற இயக்குனர்களின் படங்களில் அவர் நடிப்பாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் எப்போதும் மேடையில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். அந்த வகையில் ’டெவில்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. பிப்ரவரி 2ஆம் தேதி படப்பிடிப்பு தொடக்கம்?

கார்த்தி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பவதாரிணி பாடும் பாடலில் ஒரு குழந்தையும், தெய்வமும் கலந்து இருக்கும்: பிரபல இயக்குனரின் இரங்கல் பதிவு..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு குறித்து பிரபல இயக்குனர்  வசந்த பாலன்

மறுமணம் செய்ய போகிறாரா நடிகை நிஹாரிகா? அவரே அளித்த பதில்..!

விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்' என்ற படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவர் விரைவில் மறுமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. 

கர்ப்ப நேரத்தில் இதையெல்லாம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. அமலாபால் வெளியிட்ட வீடியோ.

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அஜர்பைஜானில் பிரபல மலையாள நடிகர்..அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இணைந்ததாக அறிவிப்பு..!

அஜித் நடித்த வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.